நீதியில் நிலைத்திருந்து _ உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது _ உம்
சாயலால் திருப்தியாவேன் _ நீதியில்
1.
தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலுயா ஓசான்னா – நீதியில்
2.
ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம் – நீதியில்
3.
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா – நீதியில்
4.
படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன் – நீதியில்